தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடுவது முற்றிலும் தவறானது - திஸ்ஸ விதாரன

Published By: Digital Desk 4

03 Aug, 2021 | 05:53 AM
image

(இராஜதுரை ஹஷான்)

 

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை  நாட்டு மக்கள் அனைவரும் முறையாக கடைப்பிடித்தால்தான் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

தற்போதைய நெருக்கடியான  சூழ்நிலையில் தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை முன்வைத்து  போராட்டங்களில் ஈடுபடுவது முற்றிலும் தவறான செயற்பாடாகும் என  லங்கா சமசமாஜ கட்சியின் தலைரும்,பாராளுமன்ற உறுப்பினருமான  பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

Articles Tagged Under: Prof. Tissa Vitharana | Virakesari.lk

கொவிட்-19 வைரஸ் தாக்கம்  தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அதிபர் - ஆசிரியர் சேவையில் சம்பள பிரச்சினை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.

கோரிக்கைகளை வெற்றிக் கொள்ள போராட்டத்தில் ஈடுப்படும் தருணம் இதுவல்ல.போராட்டத்தில் ஈடுப்படும் போது எவரும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பதில்லை.

ஆகவே தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் போராட்டங்களில் ஈடுப்படுவது முற்றிலும் வெறுக்கத்தக்கது.

 ஒரு தரப்பினரது தவறான  செயற்பாடுகள் ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும். புதுவருட கொவிட் கொத்தணி பரவல் இவ்வாறே ஆரம்பமானது என்பதை நாட்டு மக்கள் மறந்து விட கூடாது. 

பொது மக்கள் தங்களின் சுய பாதுகாப்பு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அனைத்து அறிவுறுத்தல்களையும்,பொலிஸாரும், பொதுசுகாதார பாதுகாப்பு தரப்பினர் வழங்குவார்கள் என எதிர்பார்க்க முடியாது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தும் செயற்திட்டம் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் ஒன்றினைத்து வகுக்க வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தல், தடுப்பூசி செலுத்தல் ஆகிய பணிகள் கடந்த காலத்தை காட்டிலும் முன்னேற்றகரமாக  செயற்படுத்தப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50