அரச ஊழியர்களை பணிக்கு அழைத்தமை குறித்து அரசாங்கம் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்..!

Published By: J.G.Stephan

02 Aug, 2021 | 06:00 PM
image

(எம்.மனோசித்ரா)
அரச ஊழியர்கள் சகலரையும் பணிக்கு அழைக்குமாறும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்களை முன்னெடுக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அரசாங்கத்திடம் அல்லது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் பரிந்துரைக்கப்பட்டதா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் வலியுறுத்தினார்.

தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதற்கான நோக்கம் மாகாணசபைத் தேர்தலை இலக்காகக் கொண்டதா என்ற சந்தேகம் நிலவுகிறது. தடுப்பூசி வழங்கும் பணிகள் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்டதாக இருக்க வேண்டுமே தவிர , அரசாங்கத்தின் நிகழச்சி நிரலை இலக்காகக் கொண்டதாக இருக்கக் கூடாது என்றும் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், அரச ஊழியர்கள் சகலரும் தற்போது பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதோடு, மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  யாருடைய தேவைக்காக இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டது என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.

உலக சுகாதார ஸ்தாபனம் , அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்பன நாடு கொவிட் பரவல் அபாய நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். ஆரம்பத்தில் இவ்வாறான எச்சரிக்கைகளை அரசாங்கம் புறக்கணித்தமையே சில மாதங்களுக்கு நாட்டை முடக்க வேண்டிய சூழலை தோற்றுவித்தது. மக்களை கொவிட் அபாயத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். அபாயத்தை உணராமல் கட்டுப்பாடுகளை தளர்த்துவது பொறுத்தமற்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53