ஆறு தினங்களாக தேடப்பட்டு வந்த பெண்: டெவோன் நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியிலிருந்து சடலமாக மீட்பு...!

Published By: J.G.Stephan

02 Aug, 2021 | 12:43 PM
image

டெவோன் நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் நேற்று மாலை (01.08.2021) மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திம்பளை பத்தனை  பொலிஸார் 02.08.2021  இன்று காலை தெரிவித்தனர்.

இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்ட பெண் பத்தனை நகரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான வீ.மலர்விழி வயது (53) என உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமற்போன இப்பெண் தொடர்பில் திம்புளை பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.

இதனடிப்படையில் வீட்டிலிருந்து காணாமற்போன குறித்த பெண் நீலம் மற்றும் வெள்ளை நிற கோடுகள் இட்ட சட்டை ஒன்றே அணிந்திருந்ததாக பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முறைப்பாட்டுக்கமைவாக பொலிஸார் டெவோன்  நீர்வீழ்ச்சி  பகுதியில் தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் குடை, பாதணிகள், மற்றும் கைப்பை ஒன்று நீர்வீழ்ச்சி உச்சப்பகுதியில் இருந்ததை கண்டறிந்துள்ளனர்.

அத்துடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் பெண்ணின் தகவல் ஏதும் கிடைத்திராத நிலையில் (01.08.2021) மாலை நீர்வீழ்ச்சியில் சுமார் 200 அடி பள்ளத்தில் நீரில் மிதந்த நிலையில், குறித்தப் பெண்ணின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இவரின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதணைக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதே நீர்வீழ்ச்சியினை பார்வையிட கடந்த மாதம் (18) திகதி சென்ற 04 சிறுமிகளில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லென்தோமஸ் தோட்ட சிறுமியான மணி பவித்ரா  (19) கால் இடறி வீழ்ந்து காணாமற் போயிருந்தார்.

அவரை தேடும் பணியில் படையினர் ஈடுப்பட்ட போதிலும் இதுவரை சிறுமி மீட்கப்படாமல் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02