தீர்க்க முடியாத கடன்கள்

Published By: Gayathri

02 Aug, 2021 | 01:54 PM
image

என்.கண்ணன்

நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நாட்டின் பொருளாதார நிலைக்கு மத்தியில், அரசாங்கத் தரப்பும், எதிர்க்கட்சிகளும் நாட்டு மக்களுக்கு காட்டி வரும் கணக்குகள், அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த ஆண்டில் இலங்கை 4.5 பில்லியன் டொலர்கள் கடன்களை மீளச்செலுத்த வேண்டியிருந்தது. அதில் 3.5 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு கடன்களாகும்.

இதில் ஜூலையிலும், ஒக்டோபரிலும், திருப்பிச் செலுத்த வேண்டிய தலா ஒரு பில்லியன் டொலர்கள் கடன்களும் அடங்கியிருந்தன.

அதில், ஒரு தவணைக்குரிய ஒரு பில்லியன் டொலர்கள் கடன்கள் கடந்த 27ஆம் திகதி அடைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முன்னதாக, நாட்டின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 4 பில்லியன் டொலர்களாக இருந்தது.

தற்போது அது, வெறுமனே 3 பில்லியன் டொலர்களாக குறைந்திருக்கிறது.

2004ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நாட்டின் சராசரி, வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 5.584 பில்லியன் டொலர்களாக காணப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 2018 ஏப்ரலில் 9.936 பில்லியன் டொலர்கள் கையிருப்புக் காணப்பட்ட அதேவேளை, குறைந்தபட்சமாக, 2009 மார்ச் மாதம், 1.272 பில்லியன் டொலர்களாக இருந்துள்ளது.

போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தபோதுதான், ஆக குறைந்த வெளிநாட்டு நாணயக் கையிருப்பு காணப்பட்டது.

போர் முடிந்து 12 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் போர் சார்ந்த பொருளாதார நெருக்கடிகளில் இருந்து அரசாங்கம் விடுபட்டிருக்க வேண்டியபோதும், 2009 நடுப்பகுதிக்குப் பின்னர், முதல்முறையாக ஆக குறைந்த வெளிநாட்டு நாணயக் கையிருப்புடன் அரசாங்கம் இருக்கிறது.

இதனால், நாடு பாரிய நெருக்கடியைச் சந்திக்கப் போகிறது என்று எதிர்க்கட்சிகள் மிரட்டிக் கொண்டிருக்கின்றன.

தாங்கள் 2019இல் ஆட்சியை விட்டுச் செல்லும் போது 7 பில்லியன் டொலர்கள் இருப்பு காணப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் அதனை பாதியை விடக் குறைத்து விட்டதாகவும் பிரதான எதிர்க்கட்சி  குற்றம்சாட்டுகிறது.

குறுகிய காலத்துக்குள் அரசாங்கம் பெருமளவு கடன்களைத் திரட்டியுள்ளதாகவும், அவர்கள் கூறுகின்றனர்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-01#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22