மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து சேவையில் 110 புகையிரதங்கள்..!

Published By: J.G.Stephan

02 Aug, 2021 | 11:24 AM
image

(இராஜதுரை ஹஷான்)
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து சேவை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும். காலை மற்றும் மாலை அலுவலக சேவைக்காக 110 புகையிரதங்கள் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்படும் என புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையிலான புகையிரத போக்குவரத்து சேவை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய மாகாணங்களுக்கிடையில் பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவையினை கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கிடையில் புகையிரத போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று காலை 4.30 மற்றும் காலை 5 மணிக்கு கண்டி- கொழும்பு கோட்டைக்கு இரண்டு புகையிரங்களும், காலை 4.30 மணிக்கு பெலியத்தை - மருதானை, காலை 5 மணிக்கு காலி - மருதானை வரை ஒரு புகையிரதம் சேவையில் ஈடுப்படும். அத்துடன் சிலாபம் ,மஹவ ஆகிய பகுதிகளிலும் இருந்து காலை அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடும்.

மேலும், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பொதுபயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்துவது அவசியமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04