கொரோனா கட்டுப்பாடுகள் சுதந்திரத்தை பறிப்பதாகத் தெரிவித்து பிரான்ஸில் போராட்டம்

Published By: Gayathri

02 Aug, 2021 | 12:30 PM
image

கட்டாய கொரோனா கட்டுப்பாடுகளால் தங்களது சுதந்திரம் பறிக்கப்படுவதாகத் தெரிவித்து பிரான்ஸில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ், கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருகிறது.

பிரான்சில் கொரோனா 4 ஆம் அலை தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுளுக்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரான்ஸின் தலைநகர் பாரீஸ் மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டாய கொரோனா கட்டுப்பாடுகளால் தங்களது சுதந்திரம் பறிக்கப்படுவதாக கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மனித உரிமை உள்ள நாட்டில் இவ்வாறு இடம்பெறுவதை நம்ப முடியாதது. இதனால் தான் நாம் வீதிகளில் இறங்கி போராடுகிறோம். எங்கள் சுதந்திரம் ஆபத்தில் இருப்பதாக நினைக்கிறோம்  என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர். ஆனால் மக்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தியதையடுத்து ஏற்பட்ட மோதலில் 3 பொலிஸார் காயம் அடைந்தனர்.

போராட்டங்கள் தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07