ரிஷாத்தின் இல்லத்தில் பணியாற்றிய 11 பெண்களில் மூவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்

Published By: Vishnu

02 Aug, 2021 | 07:42 AM
image

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் கொழும்பில் அமைந்துள்ள இல்லத்தில் கடந்த 2010 முதல் வீட்டுப் பணியாளர்களாக பணியாற்றிய 11 பெண்களில் மூன்று பேர் உயிரிழந்து விட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் அவரது வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட 16 வயதுடைய சிறுமி தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாகவே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணைகளைத் தொடர்ந்து 16 வயது சிறுமி உட்பட மொத்தம் 11 பெண்கள் 2010 - 2021 க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் ரிஷாத்தின் இல்லத்தில் பணியாளர்களாக தொழில்புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16 வயதுடைய சிறுமியை ரிஷாத்தின் இல்லத்திற்கு பணியாளராக அழைத்து வந்த அதே தரகரே ஏனைய பெண்களை, அவரது இல்லத்திற்கு அழைத்து வருவதில் முக்கிய பங்கு வகித்ததாக பொலிஸார் முன்னர் கூறியிருந்தனர்.

பதின்ம வயது சிறுமியைத் தவிர, முன்னர் அங்கு பணிபுரிந்த மற்றொரு பெண் உடல்நலக்குறைவு (புற்றுநோய்) காரணமாக இறந்துவிட்டதாக அறியப்படுகிறது. அதே நேரத்தில் மற்றொரு பெண் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நேற்று எட்டு பெண்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

29 வயதான பெண் ஒருவர், எம்.பி.யின் இல்லத்தில் பணிபுரியும் போது பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

16 வயது சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் ரிஷாத்தின் மனைவி, மாமனார் மற்றம் தரகர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் முன்னாள் அமைச்சரின் 44 வயது மைத்துனரும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44