அதிபர், ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு !

Published By: Digital Desk 4

02 Aug, 2021 | 11:29 AM
image

நாளை முதல் அனைத்து அரச பணியாளர்களும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய  வழமைபோன்று அரச பணிகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

Articles Tagged Under: கல்வி அமைச்சு | Virakesari.lk

ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறிக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அரச பணியாளர்களை சுழற்சி முறையிலும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் அழைத்து பணி செய்விக்கும் வகையில் வெளியிட்ட அனைத்து சுற்றுநிருபங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சகல அரச பணியாளர்களையும் வழமை போன்று சேவைக்கு அழைப்பதற்கான சுற்று நிருபத்துக்கு அமைய, கல்விசார்ந்த துறையினரும் செயற்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இது தொடர்பான கடிதங்களை உரிய தரப்புக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, இதற்கு மேலதிகமாக அனைத்து மாகாண கல்வி திணைக்களங்கள், வலய மற்றும் கோட்ட கல்வி அதிகாரிகளும் தங்களது பணிகளுக்கு திரும்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண, வலய மற்றும் பிராந்திய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் அண்மையில் வெளியிடப்பட்ட அரச பணியாளர்கள் சுற்று நிரூபத்திற்கு அமைய செயல்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நாளை (02) முதல் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்பட்ட கடமைக்கு சமுகமளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04