ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் : 300 மரணங்கள் - அதி அபாயம் மிக்க பிரதேசங்கள் அறிவிப்பு 

Published By: Digital Desk 4

01 Aug, 2021 | 08:19 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை கடந்த வாரம் முதல் சடுதியான அதிகரிப்பை காண்பிக்கிறது.

கடந்த வாரத்தில் மாத்திரம் 11 529 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு , 314 மரணங்களும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. 

தற்போதுள்ள நிலைமை அபாயமானது என்றும் , எனவே சகலரதும் நலன்கருதி குறிப்பிட்ட வயதெல்லையிலுள்ளோர் நிச்சயம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அபாயமுடைய பிரதேசங்கள்

இவ்வாறு நாளாந்தம் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் கொவிட் பரவலில் அதிக அபாயமுடைய பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 

கடந்த 14 நாட்களுக்குள் ஒவ்வொரு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு அபாயமுடைய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய கொழும்பில் 19 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும் , கம்பஹாவில் 15, களுத்துறையில் 15, குருணாகலில் 23, புத்தளத்தில் 13, கண்டியில் 23, மாத்தளையில் 12, நுவரெலியாவில் 13, கேகாலையில் 11, இரத்தினபுரியில் 17, யாழ்ப்பாணத்தில் 14, கிளிநொச்சியில் 4, மன்னாரில் 4, முல்லைத்தீவில் 5, வவுனியாவில் 3, அம்பாறையில் 7, மட்டக்களப்பில் 13, கல்முனையில் 13, திருகோணமலையில் 8, அநுராதபுரத்தில் 19, பொலன்னறுவையில் 8, பதுளையில் 16, மொனராகலையில் 11, காலியில் 20, அம்பாந்தோட்டையில் 12, மாத்தறையில் 17  சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும் அபாயமுடையவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30