நிதி நெருக்கடி இல்லையென்றால் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடன் தீர்வை வழங்குங்கள்..!

Published By: J.G.Stephan

02 Aug, 2021 | 11:55 AM
image

(எம்.மனோசித்ரா)


அரசாங்கத்திற்கு எவ்வித நிதி நெருக்கடியும் இல்லை  என்று அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறெனில் மேலும் தாமதித்துக் கொண்டிருக்காது அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வழங்கி மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.



அவர் மேலும் கூறுகையில்,

மாயாஜாலத்தினூடாகவும் , போலியான ஊடக பிரசாரங்கள் ஊடாகவும் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி காணப்படுவதாக நாம் கூறிய போது , அமைச்சரொருவர் அவ்வாறு அரசாங்கத்திற்கு எவ்வித பொருளாதார நெருக்கடியும் இல்லை. வேண்டியளவிற்கு அரசாங்கத்திடம் நிதி காணப்படுவதாகக் கூறினார்.

அவ்வாறெனில் மேலும் தாமதித்துக் கொண்டிருக்காது அதிபர் , ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வை வழங்கி மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

அதிபர் ஆசியர்களின் சம்பள முரண்பாடு மாத்திரமின்றி உரப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தற்போது நாட்டில் காணப்படுகின்றன. ஆனால் இவற்றில் எந்த பிரச்சினை குறித்தும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை.

ஆனால் அமைச்சர்கள் நீண்ட காலமாக நித்திரையிலிருந்து  திடீரென  எழுந்ததைப் போன்று சில விடயங்களைக் கூறுகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04