சீனப் பிடிக்குள் சிக்கும் இலங்கை

Published By: Gayathri

01 Aug, 2021 | 05:08 PM
image

ஹரிகரன்

"சீனாவின் சர்வதேச நலன்களை உறுதி செய்வதில், சீனாவுக்காக வரிந்து கட்டிக்கொள்வதில், இலங்கை உறுதியாக உள்ளது"

சீனப் பிரதமர் லீ கெகியாங் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும்,  செப்டெம்பர் 10ஆம் திகதி அவர் இரண்டு நாட்கள் பயணமாக கொழும்பு வரவிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சீனப் பிரதமரின் இந்தப் பயணம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று அல்ல. சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன் பயணம் தான் எதிர்பார்க்கப்பட்டது. 

அவர் கடந்த ஜூன் மாதம் கொழும்பு வருவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.  கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக அந்தப் பயணம் பிற்போடப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே சீனப் பிரதமர் லீ கெகியாங் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

செப் டெம்பர் 30 ஆம் திகதிக்குள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு விடும் என்றும், அதன் பின்னர் நாடு முழுமையாக திறக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறுகின்ற நிலையில் தான் சீனப் பிரதமரின் இந்தப் பயணத் திட்டமும் வெளியே கசிந்திருக்கிறது.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சீனாவுடனான நெருக்கமும், ஒத்துழைப்பும் அதிகரித்திருக்கிறது.

இது தொடர்பான கவலைகளும், கரிசனைகளும் சர்வதேச அளவில் தீவிரமடைந்துள்ள நிலையில் சீனப் பிரதமரின் இந்தப் பயணம் இன்னும் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும் எனக் கருதப்படுகிறது.

ஏனென்றால், கடந்த 10 மாதங்களுக்குள் சீனாவின் இரண்டு உயர்மட்டப் பிரதிநிதிகள் கொழும்புக்கு அடுத்தடுத்துப் பயணங்களை மேற்கொண்டிருந்தனர்.

ஒருவர் முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் பணியக உறுப்பினருமான யாங் ஜீச்சி  அவரது பயணத்துக்குப் பின்னர் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ பெங்கியின் பயணம் இடம்பெற்றிருந்தது.

இந்தப் பயணங்களின்போது எட்டப்பட்ட பல இணக்கப்பாடுகளும், கையெழுத்திடப்பட்ட உடன்பாடுகளும் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை.

இலங்கையுடன் சீனா பாதுகாப்பு ரீதியான நெருக்கத்தைக் கொண்டிருந்தாலும், அதனை வெளிப்படுத்துவதைக் காட்டிலும், பொருளாதார ரீதியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-01#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04