காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் படகுச் சேவை இடம்பெறுவது நிச்சயம் - இந்த்ஸ்ரீ படகுச்சேவை நிறுவனம்

Published By: Gayathri

01 Aug, 2021 | 05:06 PM
image

நேர்காணல்:- ஆர்.ராம் 

கொரோனா நெருக்கடிகள் குறைந்தததும் திட்டமிட்டவாறு காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் படகுச் சேவை இடம்பெறுவது நிச்சயமானது என்று இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

 

கேள்வி:- உங்களைப் பற்றிய சிறு குறிப்பை தாருங்கள்?

பதில்:- நான் யாழ்ப்பாணத்தினை பூர்வீகமாக கொண்டவன். இலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில்தொழில் முனைவாளனாகவும் இருக்கின்றேன். 

தற்போது இந்த்ஸ்ரீ படகு சேவை தனியார் நிறுவனத்தின்  முகாமைத்துவப் பணிப்பாளராக உள்ளேன். நிறுவனத்தின் தலைவராக யாழ்ப்பாணத்திற்கான முன்னாள் இந்திய துணைத்தூதுவர் ஆறுமுகம் நடராஜன் இருந்து வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றார்.

கேள்வி:- நீங்கள் காங்கேசன்துறைக்கும், காரைக்காலுக்கம் இடையிலான படகு சேவையை நடத்துவதில் கரிசனை கொண்டமைக்கான காரணத்தினை கூறுங்கள்?

பதில்:- முதலாவதாக இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் வரலாற்று ரீதியான தொடர்புகள் மிகவும் இறுக்கமான நிலையில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. 

அதிலும் தமிழகத்திற்கும், இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கும் இடையில் தொப்புள்கொடி உறவுகள் காணப்படுகின்றன. 

இருப்பினும் அசாதாரண சூழல் காரணமாக அவை அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ள நிலைமை நீடிக்கின்றது. போர் நிறைவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் அவ்விடயங்கள் அனைத்திற்கும் புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற சிந்தனை என்னிடத்தில் ஏற்பட்டிருந்தது. 

குறிப்பாக, மக்களுக்கு இடையிலான இருதரப்பு தொடர்புகளை மேம்படுத்தல், வர்த்தக தொடர்புகளை ஊக்குவித்தல் மற்றும் இந்துக்கள், பௌத்தர்களின் தல வழிபாடுகள், யாத்திரைகளை இலகுபடுத்தல் ஆகிய மூன்று இலக்குகள் என்னுள் நீண்ட நாட்களாகவே இருந்தது. 

இதற்காக, தமிழகத்திற்கும், வடமாகாணத்திற்கும் இடையிலான போக்குவரத்தினை இலகுபடுத்த வேண்டும் என்ற சிந்தனை என்னிடத்தில் நீடித்துவந்தது.

இந்த நிலையில் இந்திய, இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் எனது நீண்டகால எண்ணப்பாட்டிற்கு தற்போது செயல்வடிவம் வழங்குவதற்கான ஏது நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன என்று கருதுகின்றேன்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/varthaka-ula/2021-08-01#page-7

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18