துருக்கி காட்டுத் தீயில் சிக்கி ஆறு பேர் உயிரிழப்பு

Published By: Vishnu

01 Aug, 2021 | 12:56 PM
image

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் காட்டுத்தீயால் அழிந்த தெற்கு துருக்கியின் சில பகுதிகளை "பேரிடர் பகுதிகள்" என்று அறிவித்துள்ளார்.

தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்த பின்னர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது.

துருக்கியில் புதன்கிழமை முதல் ஏற்பட்ட தீ, கிராமங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை ஆக்கிரமித்து மக்களை வெறியேற்றுவதற்கும் கட்டாயப்படுத்தியுள்ளது.

இதனால் மனாவ்காட்டில் குறைந்தது ஐந்து பேரும் மர்மாரிஸில் ஒருவரும் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனவ்காட்டில் ஏற்பட்ட தீவிபத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 400 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இன்னும் 10 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா கூறினார். 

மர்மாரிஸில் தீவிபத்தால் பாதிக்கப்பட் 159 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந் நிலையில் துக்கிய ஜனாதிபதி எர்டோகன் சனிக்கிழமை ஹெலிகொப்டர் மூலமாக தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

எர்டோகன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை "பேரிடர் பகுதிகள்" என்று டுவிட்டரில் தெரிவித்ததுடன், "எங்கள் தேசத்தின் காயங்களை ஆற்றவும், அதன் இழப்புகளை ஈடுசெய்யவும், அதன் வாய்ப்புகளை மேம்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எடுப்போம்" என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17