மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செரண்டிப் தோட்டத்தில் 7வயது சிறுவனுக்கு சுடு நீரை ஊற்றிய சிறுவனின் சித்தியை ஹட்டன் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

குறித்த சிறுவனின் சித்தியை 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த பெண் சிறுவனின் முகத்திலும் கைகளிலும் சுடுநீரை ஊற்றியுள்ள நிலையில் பாதிப்புக்குள்ளான சிறுவன் எரிகாயங்களுக்குள்ளாகிய நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.