பெண்களை கொலை செய்த பின் அச்சடலத்துடன் உடலுறவு கொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இந்தியாவில் பெங்களூரில் நடந்த தொடர் கொலை மற்றும் பெண்களை கொடூரமாக பாலியல் வல்லுறுவுக்குட்படுத்தி வந்த 40 வயதான கிருஷ்ணமூர்த்தி எனும் கிருஷ்ணையாவை பொலிஸார் கைது செய்தனர். 

இவரை 50 வயது பெண் ஒருவரின் கொலையில் சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் கைது செய்தனர். 

இதனையடுத்து கிருஷ்ணையாவிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் 16 வயது பெண் உட்பட 4 பெண்களின் கொலையுடன் குறித்த நபர் தொடர்புப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. 

கொலை செய்த பெண்களின் சடலத்துடன் கிருஷ்ணையா உடலுறவு வைத்து கொண்ட அதிர்ச்சி தகவலும் இந்த விசாரணையின்போது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் மேற்கொண்ட விசாரணையில் இரு கொலையுடன் குறித்த நபரின் தொடர்பிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இரு கொலைகளுக்கான ஆதாரங்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.