ஜிகா வைரஸ் பாதித்தால் பிறவி குறைபாடு ஏற்படுமா..?

Published By: Digital Desk 4

30 Jul, 2021 | 06:23 AM
image

இன்றைய சூழலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் மகப்பேறு மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டலுடன் தடுப்பூசிப் போட்டுக் கொண்டால், அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் எந்தவித தொற்று பாதிப்பு ஏற்படாது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். 

சில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புடன் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் உண்டாகுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கொரோனாத் தொற்று மற்றும் டெங்கு காய்ச்சல் வந்தாலும் முறையான முனனெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டால் கருவில் வளரும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அதிலும் கர்ப்பிணிகளுக்கு ஏற்பட்டால், அவர்களின் வயிற்றில் வளரும் சிசுவிற்கு பாதிப்பு ஏற்படும். 

மேலும் சில பெண்களுக்கு கருதரித்து முதல் மூன்று மாதங்களுக்குள் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு கருசிதைவும், மூன்றாவது மூன்று மாதங்களில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தை இறந்து பிறப்பதற்குரிய வாய்ப்பும் உள்ளது. சில பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களின் கரு வளர்ச்சியடைந்து, குழந்தை பிறந்தாலும், அவர்கள் பிறவிக்குறைபாடுடன் பிறப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம். அந்த குழந்தைகளின் தலையின் அளவு இயல்பான அளவை விட சிறியதாக இருக்கும். பிறந்த பிறகு ஏற்படவேண்டிய இயல்பான வளர்ச்சியிலும் குறைபாடு ஏற்படக்கூடும். சில குழந்தைகளுக்கு மூளையின் அளவு போதிய அளவிற்கு வளர்ச்சியடையாமல் இருக்கும். உடன் நரம்பு மண்டல பாதிப்பும் ஏற்படலாம்.

இதனால் கருதரித்த பெண்கள் ஜிகா வைரஸ் பாதித்த பகுதிகளுக்கு செல்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும். கருத்தரித்த காலம் முழுவதும் நுளம்பு கடிக்காமல் பாதுகாப்புடன் இருக்கவேண்டும்.  குறிப்பாக ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு பகலில் நுளம்பு கடிப்பவர்களுக்கு அதிகம் ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. 

பொதுவாக ‘ஏடிஎஸ் ஏஜிப்டி’ என்ற வகையினதான நுளம்புகள் தான் டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அதன் அறிகுறிகள் எளிதாக வெளிப்படுவதில்லை. சிலருக்கு சில தருணங்களில் காய்ச்சல், தோலில் சிவந்த திட்டுகள், தலைவலி, கண்கள் சிவத்தல், தசைகளில் மூட்டு வலி ஏற்படும். ஜிகா வைரஸ் கிருமிகள் உடலுக்குள் நுழைந்து  பாதிப்பை வெளிப்படுத்த இரண்டு வார கால அவகாசத்தை எடுத்துக்கொள்ளும். அறிகுறிகள் ஏற்படும் போதே, பரிசோதனைகள் மூலம் பாதிப்பை உறுதிப்படுத்திக்கொண்டால் மட்டுமே நிவாரண சிகிச்சையை மேற்கொள்ள இயலும். ஜிகா வைரஸ் பாதிப்பிற்குரிய பிரத்யேகமான சிகிச்சைகள் இல்லை. தடுப்பூசிகளும் இல்லை. இருப்பினும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் திரவ ஆகாரத்தையும், தண்ணீரையும் அதிகளவு அருந்தவேண்டும். முழு ஓய்வு எடுக்கவேண்டியதிருக்கும். மேலும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலும் இருக்கவேண்டியதிருக்கும். 

டொக்டர் கவிதா

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29