சவுதி அரேபியர்களுக்கு சவுதி அரசு விதித்துள்ள அதிரடி அறிவிப்பு..!

Published By: J.G.Stephan

29 Jul, 2021 | 01:22 PM
image

இந்தியா உள்ளிட்ட கொரோனா சிகப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் சென்று வந்தால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயண தடை விதிப்பதுடன், பெரும் தொகை அபராதமாக வசூலிக்கப்படும்' என சவுதி அரேபிய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

அந்த வகையில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லிபியா, சிரியா, லெபனான்,  ஏமன், ஈரான்,  துருக்கி, ஆர்மேனியா, எதியோப்பியா, சோமாலியா, காங்கோ, ஆப்கானிஸ்தான், வெனிசுலா,  பெலாரஸ், வியட்னாம் ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் அந்நாடுகளை சிகப்பு  பட்டியலில் சவுதி அரேபிய அரசு சேர்த்துள்ளதுடன் அந்நாடுகளுக்கு செல்வதை தடை செய்துள்ளது. 

இந்நிலையில், அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு  உள்ளதாவது கொரோனா சிகப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு சென்று வர  தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சவுதி அரேபியர்கள் அந்நாடுகளுக்கு சென்று வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது.

 தடையை மீறி சிகப்பு பட்டியல் நாடுகளுக்கு நேரடியாகவோ அல்லது, வேறு நாடுகளுக்கு சென்று  அங்கிருந்து சென்று வந்தாலோ, மூன்றாண்டுகள் பயண தடை விதிக்கப்படும்.மேலும், பெரும்  தொகை அபராதமாக வசூலிக்கப்படுமென கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13