மக்களின் எதிர்ப்பையும் மீறி கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிப்பு: வட்டுவாகல் வீதியை மறித்து போராட்டம்

Published By: Gayathri

29 Jul, 2021 | 12:37 PM
image

கே .குமணன் 

முல்லைத்தீவு மாவட்டத்தின்  வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற கோட்டாபய கடற்படை முகாமிற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் இடம்பெறவிருந்த நிலையில் குறித்த காணி அளவீட்டு பணிகளுக்காக காலை 7 மணிக்கே நிலஅளவைத் திணைக்கள உயரதிகாரிகள் கடற்படை முகாமுக்குள் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அளவீடு செய்வதற்காக ஊழியர்களை ஏற்றிவந்த வாகனத்தை கடற்படை முகாமிற்கு செல்லவிடாது மறித்த பொது மக்களும் மக்கள் பிரதிநிதிகளும்  போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 இதனைத் தொடர்ந்து வருகை தந்த  அதிகாரிகளை அளவீட்டு பணியை   நிறுத்துமாறு திருப்பி அனுப்பியிருந்தனர். 

போராட்டக்காரர்கள் கடற்படை முகாமில் இருந்த நில அளவைத் திணைக்கள உயர் அதிகாரியை வெளியே வருமாறு கூறி, கடற்படை முகாமுக்கு முன்பாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் இருந்து கடற்படை வாகனம் ஒன்றில் சென்று நில அளவைத் திணைக்கள ஊழியர்களை கடற்படையினர் அழைத்து வந்து குறித்த வீதியூடாக செல்லாது மாற்று வழியூடாக கடற்படை முகாமிற்கு சென்று நில அளவை பணிகளை மேற்கொள்ள முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நில அளவீட்டை நிறுத்துமாறு கோரி வட்டுவாகல்  பகுதியில் முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியை மறித்து மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படையினர் கலகம் அடக்கும் கடற்படையினர் மற்றும் பெருமளவான பொலிஸார் புலனாய்வாளர்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டு போராட்டம் மேற்கொள்பவர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படங்களுக்கு  https://www.virakesari.lk/collections/681

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47