தடுப்பூசி செலுத்தியவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள் - அமெரிக்காவில் அறிவுறுத்தல்

Published By: Gayathri

29 Jul, 2021 | 11:14 AM
image

தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அமெரிக்க அரசு கடந்த மே மாதம் அறிவித்திருந்த நிலையில், அங்கு கொரோனா பரவல் அதிகரிப்பால் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. 

இதனையடுத்து அமெரிக்காவில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதாக அரசு அறிவித்தது.

மேலும் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அமெரிக்க அரசு கடந்த மே மாதம் அறிவித்தது.

இந்த அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், மருத்துவ நிபுணர்கள் அரசின் இந்த அறிவிப்பிற்கு அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று புதிதாக 61 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் தினசரி பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. டெல்டா வகை வைரஸ் பரவல், மீண்டும் தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் அமெரிக்காவில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இயக்குனர் ரோசெல் வலென்ஸ்கி கூறுகையில்,

“தடுப்பூசி செத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்வேளையில் டெல்டா வகை வைரஸ் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது புதிய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

எனவே கணிசமான மற்றும் அதிக வைரஸ் பரவல் உள்ள பகுதிகளில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் உட்பட அனைவரும் பொது உட்புற இடங்களில் முக கவசங்களை அணியுமாறு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பரிந்துரை செய்கிறது” என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52