வஸீம் தாஜுதீன் கொலை விவகாரத்தில் கெப்டன் திஸ்ஸவை விசாரிக்க தீர்மானம்

17 Dec, 2015 | 10:11 AM
image

பிர­பல றக்பி வீர­ரான வஸீம் தாஜு­தீனின் மர்ம மரணம் தொடர்பில் தற்­போது யாழ். பிர­தேச இரா­ணுவ முகாம் ஒன்றில் சேவை­யாற்­று­வ­தாக கூறப்­படும் கெப்டன் திஸ்ஸ அல்லது மேஜர் திஸ்ஸ என அழைக்­கப்­படும் எல­ஹர, தெஹி­வத்தை பிர­தே­சத்தைச் சேர்ந்த இரா­ணுவ வீர­ரிடம் விசா­ரணை நடத்த குற்றப் புல­னாய்வுப் பிரிவு தயா­ரா­கி­வ­ரு­வ­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த 2012 மே 17 ஆம் திகதி அதி­காலை வேளையில் வஸீம் தாஜுதீன் பய­ணித்த அவ­ரது கார் நார­ஹேன்­பிட்டி சலிகா மைதா­னப்­ப­கு­தியில் எரிந்து கொண்­டி­ருந்த போது அதனை அணைக்க முற்­பட்­ட­வர்கள் வழங்­கி­யுள்ள வாக்குமூலங்கள் கிரு­லப்­ப­னையில் கைப்­பற்­றப்­பட்ட சீ.சீ.ரி.வி.காட்­சி­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அவ­ரிடம் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அந்த தக­வல்கள் மேலும் தெரி­வித்­தன.

வஸீம் தாஜு­தீனின் கார் எரியும் போது அவ்­வி­டத்­துக்கு வந்த நபர் ஒருவர் அதனை அணைக்க காரை நோக்கி செல்லும் போது, அருகே போக வேண்டாம் என திஸ்­ஸவை ஒத்த உருவமைப்பைக் கொண்ட நபர் ஒருவர் தெரி­வித்­த­தாக பொலி­ஸா­ரினால் பதிவு செய்­யப்­பட்­டுள்ள வாக்கு மூலம் மற்றும் அந்த இடத்தில் இரு டிபண்டர் ரக வாக­னங்கள் இருந்­த­தா­கவும் அவை சிறிது நேரத்தில் மின்னல் வேகத்தில் மறைந்­த­தா­கவும் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள வாக்குமூலங்­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

அத்­துடன் கிரு­லப்­பனை சந்­தியில் இருந்து பெறப்­பட்­டுள்ள சீ.சீ.ரி.வி.காட்­சி­களில் பல வாக­னக்கள் வஸீம் தாஜு­தீனின் வாக­னத்தை துரத்தும் நட­வ­டிக்கை பதி­வா­கி­யுள்­ளது.

வஸீம் தாஜுதீன் அந்த வாக­னங்­க­ளி­ட­மி­ருந்து தப்பி செல்ல முயற்­சிக்கும் காட்­சி­களும் அதனை தடுக்கும் காட்­சி­களும் இவ்­வாறு பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

எவ்­வா­றா­யினும் இந்த காட்­சிகள் அடங்­கிய இறு­வட்டு தற்சமயம் கொழும்பு பல்­கலைக்கழகத்தின் கணினி மற்றும் தகவல் தொடர்­பாடல் பிரி­வி­னரால் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டிய பொலிஸ் தலை­மை­யக உயர் அதி­காரி ஒருவர், அதன் அறிக்கை சில நாட்­க­ளுக்குள் கிடைக்கப் பெறும் என எதிர்­பார்ப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.

இத­னி­டையே கண்­டியில் இருந்து கொழும்பு நோக்கி அனைத்து பல­்கலை மாணவர் ஒன்­றியம் நடத்­திய பேர­ணி­யொன்றின் போது, மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்­த­தாக கூறப்­படும் ஜனக

பண்­டார மற்றும் சிசித்த பிரி­யங்­கர ஆகிய மாண­வர்­களின் மர­ணமும் கொலை­யெ­னவும் அத­னு­டனும் திஸ்­ஸ­வுக்கு தொடர்­பி­ருப்­ப­தா­கவும் சந்­தே­கங்கள் எழுப்­பப்­பட்­டுள்­ளன.

எவ்­வா­றா­யினும் அது தொடர்பில் இன்னும் போதிய சாட்­சி­யங்கள் இல்லை என தெரி­விக்­கப்­படும் நிலையில் மேர்வின் சில்­வாவின் மகன் மாலக சில்­வாவை நகர மண்­டப பகு­தியில் உள்ள பிர­பல ஆடை­யகம் அருகே தாக்­கி­யமை உள்­ளிட்ட சம்ப்­வங்­க­ளு­டனும் திஸ்­ஸவே தொடர்புபட்­டி­ருந்­த­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந் நிலை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு மிக நெருங்­கி­ய­வ­ராக இருந்­த­தாக கூறப்­படும் குறித்த இராணுவ வீரர் அப்போது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இருந்துள்ளதாகவும் அவரை விசாரணைக்கு உட்படுத்தும் பட்சத்தில் மேலும் பல தகவல்களை வெளிப்படுத்த முடியுமாக இருக்கும் எனவும் புலனாய்வுப் பிரிவு நம்புவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் சுட்டிக்காட்டின.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40