இந்தியாவை வீழ்த்தியது இலங்கை 

29 Jul, 2021 | 06:31 AM
image

இந்திய அணிக்கு எதிரான 2 ஆவது இருபதுக்கு -20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் பங்கேற்று விளையாடுகின்றது.

இதன் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஷிக்கர் தவான் 40 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

133 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்து 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டியில் 4 விக்கெட்டுகளால் இந்திய அணியை வீழ்த்தியது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் குல்திப் யாதவ் 02 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41