இலங்கைக்கு வருகிறது 7 இலட்சம் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் - சுகாதார அமைச்சர் உறுதி

Published By: Digital Desk 4

28 Jul, 2021 | 09:13 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜப்பானிலிருந்து எதிர்வரும் சனிக்கிழமை 728 460 அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 

Articles Tagged Under: பவித்திரா வன்னியாராச்சி | Virakesari.lk

இவ்வாறு கிடைக்கப் பெறுபவற்றில் 490 000 தடுப்பூசிகளை முதற்கட்டமாக அஸ்ட்ரசெனிகாவைப் பெற்றோருக்கு இரண்டாம் கட்டமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவிக்கையில்,

138 இலட்சம் (13.8 மில்லியன்) தடுப்பூசிகள் இதுவரையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 1.2 மில்லியன் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளும் , ஒரு இலட்சத்து 65 000 ஸ்புட்னிக் தடுப்பூசிகளும் , 10.7 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளும் , 2 இலட்சத்து 5920 பைசர் தடுப்பூசிகளும் , 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகளும் இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் இன்று காலை வரை 8.2 மில்லியன் பேருக்கு முதற்கட்ட தடுப்பூசியும் , 1.8 மில்லியன் பேருக்கு இரு கட்ட தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய 10.8 மில்லியன் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரையில் 68.4 சதவீதமானோருக்கு முற்கட்டமாகவேனும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 16.1 சதவீதமானோருக்கு இரு கட்டங்களாகவும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04