ஹரின் பெர்னாண்டோவிடம் 5 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு

Published By: Digital Desk 3

28 Jul, 2021 | 04:38 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இன்று புதன்கிழமை குற்ற விசாரணைப் பிரிவில் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னர் ஹரின் பெர்னாண்டோவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் அவரால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பிலேயே அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை காலை 10.00 மணிக்கு குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஹரின் பெர்னாண்டோவினால் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மனுஷ நாணயக்கார உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் இன்று ஹரின் பெர்னாண்டோவுடன் குற்ற விசாரணைப் பிரிவிற்கு சமூகமளித்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04