இளையோர் உலக மெய்வல்லுநர் போட்டிக்கு இருவர் தெரிவு

Published By: Gayathri

28 Jul, 2021 | 05:40 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இளையோர் உலக மெய்வல்லுநர் போட்டிக்கான தெரிவுப் போட்டியாக நடத்தப்பட்ட போட்டியில்  மத்துகம ஆனந்தா சாஸ்த்ராலய பாடசாலையின் மாணவன் இசுரு கெளஷல்ய, கொழும்பு லும்பினி பாடசாலையின் மாணவி மெதானி ஜயமான்ன இருவரும் சிறந்த ‍நேரப்பெறுதியில் ஓடி முடித்தனர்.

இளையோர் உலக மெய்வல்லுநர் போட்டிக்கு ஏற்கனவே தெரிவாகியுள்ள இவர்கள் இருவரும் நேற்று கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற இளையோர் உலக மெய்வல்லுநர் போட்டிக்கான தெரிவுப் போட்டியில் பங்கேற்றிருந்தனர்.

இதில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற இசுரு கெளசல்ய போட்டித் தூரத்தை 46.90 செக்கன்களில் ஓடி முதலிடம் பிடித்தார். 

இது ஆசிய பிராந்தியத்தில் அவரது வயதுப் பிரிவில் எட்டப்பட்ட 7 ஆவது அதி சிறந்த நேரப் பெறுதியாக பதிவாகியுள்ளது.  எனினும், அவரது வயதுப் பிரிவில் இவ்வருடத்தில் பதிவான அதிசிறந்த நேரப் பெறுதியாக குறிப்பிடப்படுகிறது.

இளையோர் உலக மெய்வல்லுநர் போட்டியின் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டிக்கு  ஏற்கனவே தகுதி பெற்றுள்ள மெதானி ஜயமான்ன, ‍நேற்றைய தினம் நடைபெற்ற பெண்களுக்கான மீற்றர் ஓட்டப் போட்டியில் 11.85 செக்கன்களில் ஓடி முடித்ததால் இளையோர் உலக மெய்வல்லுநர் போட்டியின் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்கேற்கும் தகுதியை பெற்றுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59