புத்தளம் சிலாபம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 58 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 

வேன் ஒன்று சைக்கிள் ஒன்றுடன் மோதி இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் சைக்கிளில் பயணித்த நல்லதரன்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஏ. தர்மபால என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிலாபத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த வேன் ஒன்று அதே திசையில் பயணித்த சைக்கிளில் மோதி விபத்திற்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த நபர், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார். 

விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.