கொரோனா சிகிச்சை நிலையங்கள் நிரம்பியுள்ளன : மக்களே எச்சரிக்கையுடன் செயற்படுங்கள் என்கிறார் வைத்திய நிபுணர் ஹேமந்த

Published By: Digital Desk 4

27 Jul, 2021 | 09:46 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களின் பெருமளவானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன் சிக்கல் நிலைமை அதிகமாகக் காணப்படுபவர்களாகவும் உள்ளனர்.

அத்தோடு சிகிச்சை நிலையங்களிலும் தொற்றாளர் நிரம்பியுள்ளதாக சுகாதார தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

எனவே சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் போக்குவரத்து கட்டுப்பாடுகளை முன்னரைப் போன்று கடுமையாக்க வேண்டியேற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் போன்று அபாயம் மிக்க நிலைமை இல்லை - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்  | Virakesari.lk

இது தொடர்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில் ,

கடந்த சில வாரங்களை விட தற்போது இனங்காணப்படுகின்ற தொற்றாளர்களில் பெருமளவான அறிகுறிகள் தென்படுவதோடு , அவர்கள் சிக்கல் நிலைமை அதிகமுடையவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக பெருமளவானோர் ஒட்சிசன் தேவையுடையோகவுள்ளனர்.

தொற்றாளர்களை அனுமதித்து சிகிச்சையளிப்பதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த பெரும்மலவான சிகிச்சை நிலையங்கள் தற்போது நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சிகிச்சை நிலையங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்திலேனும் நாட்டை முழுமையாக திறக்க முடியுமா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுகின்றனர் என நாம் அவதானித்தால் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்த முடியும்.

மாறாக அவ்வாறில்லை என்றால் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் தாமதம் ஏற்படும் அல்லது கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வேண்டியேற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31