தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பொடிமெனிக்கே ரயில், கொட்டகலை - ஹட்டன் ஆகிய புகையிரத நிலையத்திற்கிடையில் 110 என்ற கட்டைப்பகுதியில் நேற்று 1.45 மணியளவில் தடம்புரண்டுள்ளது.

தற்போது ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாகவும் நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.