பெகாசஸ் – புலப்படாத எதிரி

Published By: J.G.Stephan

26 Jul, 2021 | 06:10 PM
image

-சுபத்ரா - 

புலனாய்வு என்று வந்து விட்டாலே அமெரிக்காவின் சி.ஐ.ஏ., ரஷ்யாவின் கே.ஜி.பி., இந்தியாவின் றோ ஆகியவற்றுக்கு முன்னால், மொஸாட் தான் நினைவுக்கு வரும். இஸ்ரேலின் தேசிய புலனாய்வுப் பிரிவு தான் மொஸாட். பிரமிக்க வைக்கும் பல புலனாய்வு நடவடிக்கைகளை அசாத்தியமான துணிச்சலுடன் முன்னெடுத்திருக்கிறது மொஸாட்.

மொஸாட் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற யோசி கோகென் (Yossi Cohen) கடந்த மாதம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்திருந்த செவ்வியில், ஈரானின் அணுசக்தி திட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த பாதாள அறைக்குள் நுழைந்து, தமது புலனாய்வாளர்கள் அவற்றை கைப்பற்றி வந்தது குறித்தும், ஈரானின் அணு விஞ்ஞானியை மொஸாட் குழுவினர் கொன்றது குறித்தும் திகைப்பூட்டும் தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இதுபோன்ற யாரும் எதிர்பாராத சாகச வரலாற்றைக் கொண்டது தான் மொஸாட். அதுபோலவே நவீன- பாதுகாப்புத் தளபாடங்கள், கருவிகளை உருவாக்குவதிலும் இஸ்ரேலின் திறமை மதிப்பிடற்கரியது.

சுற்றிவர உள்ள இஸ்லாமிய நாடுகளின் கையில் அகப்பட்டு விடாமல் இருப்பதற்காக எப்போது விழிப்புடன் இயங்கிக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் உள்ள சிறிய நாடு தான் இஸ்ரேல். அங்கு யூதர்கள் தமது இருப்பை காக்க வேண்டுமென்றால், தங்களின் வலிமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

அதுதான் அவர்களின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கும் சிறப்பாக படை மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளுக்கும் காரணம்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-25#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right