ஹிஷாலினியின் உடலை மீள தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு..!: ரிஷாத்தின் மனைவி உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்

Published By: J.G.Stephan

26 Jul, 2021 | 08:07 PM
image

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனினுடைய இல்லத்தில் பணிக்கமர்க்கப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் உடலை மீள தோண்டியெடுத்து புதிதாக பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேற்படி உத்தரவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அத்தோடு, குறித்த சிறுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த நால்வரையும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் இன்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது

ரிஷாத் பதியுதீனுடைய மனைவி , மனைவியின் தந்தை, சிறுமியை கொழும்பிற்கு அழைத்து வந்த தரகர் மற்றும் குறித்த வீட்டில் பிரிதொரு பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியமை தொடர்பில் கைது செய்யபட்ட ரிஷாத் பதியுதீனுடைய மனைவியின் சகோதரர் ஆகியோர் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதன் போதே நீதவான் நீதிமன்றத்தினால் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தோடு சிறுமி ஹிஷாலியின் சடலத்தை மீளத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு சம்பவம் தொடர்பில் இதுவரையில் 36 வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.  இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் முன்னாள்அமைச்சரின் மனைவி , மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை கொழும்பிற்கு அழைத்து வந்த தரகர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். 

குறித்த சந்தேகநபர்களை நேற்று திங்கட்கிழமை காலை வரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனையடுத்து நேற்று காலை குறித்த சந்தேகநபர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் 36 வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பு தெற்கு குற்ற விசாரணைப்பிரிவு , கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு மற்றும் பொரளை பொலிஸ் உள்ளிட்ட பல விசாரணைக் குழுக்களால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பிலும் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக சுற்றுசூழல், தொழிநுட்ப மற்றும் விஞ்ஞானபூர்வமான நேரடியான சாட்சிகளின் அடிப்படையில் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பிலும் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளார்.

இது தவிர சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் பிரிதொரு யுவதி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பிலும் தெரியவந்தது. 

இச்சம்பவம் தொடர்பில் ரிஷாத் பதியுதீனுடைய மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் தொடர்பில் அனுபவமும் நிபுணத்துவமும் உடைய அதிகாரிகளால் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பவத்துடன் தொடர்புடைய சகல நபர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36