தலிபான்களை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை ஆப்கானிஸ்தானில் நிறுவ பாகிஸ்தான் முயற்சி

Published By: Gayathri

26 Jul, 2021 | 04:29 PM
image

(ஏ.என்.ஐ)

தலிபான்களை உள்ளடக்கிய ஒரு இடைக்கால அரசாங்கத்தை ஆப்கானிஸ்தானில் நிறுவுவதற்கு பாக்கிஸ்தான் திட்டம் வகுத்து முயற்சித்து வருகிறது.  

இவ்வகையான ஆதரவு போக்கின்றி குறித்த பயங்கரவாத குழுவால் செயற்பட்டிருக்க இயலாது என தெற்காசிய கற்கைளுக்கான ஐரோப்பிய மன்றம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க - நேட்டோ படைகள் விலகியதன் பின்னர்  ஆப்கானிஸ்தானில் மோதல் ஒரு புதிய வடிவை அடையும். 

இது மிகவும் ஆபத்தான கட்டத்திற்று சென்று பிராந்தியமயமாக்கப்பட்ட பினாமி மோதலாக அமையும் என  நேட்டோ பாதுகாப்புக் கல்லூரி (என்.டி.சி) வெளியிட்டுள்ள 'பிராந்திய சக்திகள் மற்றும் பிந்தைய நேட்டோ ஆப்கானிஸ்தான்' என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் தலிபான்களை உள்ளடக்கிய ஒரு இடைக்கால அரசாங்கத்தை ஆப்கானிஸ்தானில் நிறுவுவதற்கு பாக்கிஸ்தான் செயற்படுகின்றது. 

இருப்பினும், இஸ்லாமாபாத் தலிபான் ஆட்சிக்கு எதிரான கொள்கையை கொண்டுள்ளது. 

தலிபானகள் ஆதிக்கம் செலுத்திய அல்லது இராணுவ ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஆட்சியை அதன் தேசிய நலன்களுக்கு ஏற்றதாக இல்லை என்று தெற்காசிய கற்கைளுக்கான ஐரோப்பிய மன்றம் குறிப்பிட்டுள்ளது.

பிராந்தியத்தில் - குறிப்பாக காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் இராணுவ மேன்மையை சவாலுக்கு உட்படுத்த  போர்க்குணமிக்க பிரதிநிதிகளைப் பயன்படுத்திய நீண்ட வரலாற்றைக் பாக்கிஸ்தான் கொண்டுள்ளது என்று நேட்டோ பாதுகாப்புக் கல்லூரியின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 

தலிபான்கள் மற்றும் ஹக்கனி நெட்வொர்க் போன்ற அமைப்புகளின் செயற்பாடுகளை இங்கு குறிப்பிடலாம். 

ஆனால் ஆப்கானிஸ்தானின் புதிய தலைவர்களிடமிருந்து இந்திய சார்பு நிலைப்பாடு மிக அதிகமாக காணப்படுகின்றது.

மறுப்புறம் பாகிஸ்தானுடனான நேரடி பினாமி போருக்கு ஆப்கானிஸ்தானில் இந்தியா இன்னும் இழுக்கப்படவில்லை.  

அதற்கு பதிலாக எதிர்ப்பு போர்க்குணமிக்க குழுக்களை ஆதரிக்க இந்தியா, ஆப்கானிஸ்தான் பிரதேசத்தைப் பயன்படுத்துகிறது என்ற பாக்கிஸ்தானின் குற்றச்சாட்டுகளும் மறுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதில் அமெரிக்கா தார்மீகப் பொறுப்பைக் கைவிட முடியாது என்ற தலைப்பில் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கை மற்றும் ஆளுமை பேராசிரியர் மைக்கேல் பிளேக் குறிப்பிட்டுள்ளார். 

எதிர்காலத்தில் இதுபோன்ற தார்மீக துன்பகரமான சூழ்நிலைகளுக்குள் நுழைவதைத் தவிர்ப்பதற்கு அமெரிக்கா செயற்படவேண்டும் என்றும் அவர் குறிப்பட்டுள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பாகிஸ்தான் - தலிபான் கூட்டு ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ளது. 

அதனால்தான் அங்கு வெளிவரும் தரை நிலைமையை துல்லியமாக மதிப்பிடுவதற்கும், அதன் தாக்கங்களை அளவிடுவதற்கும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று தெற்காசிய கற்கைளுக்கான ஐரோப்பிய மன்றம் வலியுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47