தனிமைப்படுத்தல் விதிகளை மீறியோருக்கு ஏற்பட்ட நிலை..!

Published By: J.G.Stephan

26 Jul, 2021 | 02:29 PM
image

(எம்.மனோசித்ரா)
தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று  திங்கட்கிழமை காலை  6 மணியுடன் நிறைவடைந்த  24 மணித்தியாலங்களுக்குள் 151 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 52,154 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவை தவிர மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் வாகனங்கள் பிரவேசிக்கின்ற 13 இடங்களில் 3,741 வாகனங்களில் பயணித்த 5,121 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதன் போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அல்லது மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 97 வாகனங்களில் பயணித்த 160 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்தோடு கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமலும் , முகக் கவசத்தை முறையாக அணியாமலும் பலர் நடமாடுகின்றமை புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்புக்களில் தெரியவந்துள்ளது. அதன் காரணமாக இன்று திங்கட்கிழமை முதல் இது தொடர்பில் விசேட கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பில் கண்காணிப்பதற்கு 10,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58