நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 20 ஆம் ஆண்டு நினைவஞ்சலி 

Published By: Digital Desk 2

26 Jul, 2021 | 12:29 PM
image

சிவாஜி கணேசன் என்ற கலையாற்றல் நிறைந்த கலைஞனைப் போற்றிய தமிழ் பிரபலங்கள்...

நம் தேசத்திற்கு கிடைத்த பொக்கிஷம் சிவாஜி கணேசன்.....

பேரறிஞர் அண்ணா.

சிவாஜி கணேசன் போன்ற அற்புதமான கலைஞர்கள் நம் தேசத்தில் இருக்கிறார்கள் என்பதே நமக்கு பெருமை அல்லவா. நம் நாட்டிலே இப்படிப்பட்ட கலைஞர்கள் இருப்பது நமக்கு கிடைத்த புகழ் அல்லவா! அந்த வகையில் நாம் பெருமையும் பூரிப்பும் அடையவேண்டும்.

சிவாஜி கணேசன் சாதாரண நடிகராக இருந்து, இன்று தலை சிறந்த திரைப்பட நடிகரான காலம் வரை அவரை நான் நன்கறிவேன். நடிகர்களுக்கு எதைக் கண்டாலும் அதைப் படமெடுத்து மனதில் பதிய வைத்துக் கொள்ளும் ரசிப்புத்தன்மை இருக்க வேண்டும். ஒரு சிலரால்தான் இப்படிக் கண்ணில் கண்டதை நடித்துக் காட்ட முடியும்.

நாம் காண்கிறோம் பின்னர் மறந்து விடுகின்றோம்.உண்மையான நடிகன் கண்ணால் கண்டதை சந்தர்ப்பம் வரும் போது நடித்துக் காட்டித் தன் திறமையை வளர்த்துக் கொள்கின்றான்.

அந்த வகையில் சிவாஜி கணேசனுக்கு நிகர் அவரே! சிவாஜி கணேசன் தன் வாழ்க்கையில் சந்தித்த பாத்திரங்களை தன் திறமையான நடிப்பால் திரையில் திருப்பித் தருகிறார். இதுதான் அவருடைய திறமை."பராசக்தி"வந்ததால்தான் சிவாஜி கணேசன் புகழடைந்தார் என்று கூறுவது ஏற்புடையதல்ல,"பராசக்தி"வராமலிருந்தாலும் சிறிது காலத்துக்குப் பின் கண்டிப்பாக அவர் புகழ் பெற்றிருப்பார். 

ஒரு படத்தில் கர்ணன் வேடம் போட்டார். கர்ணன் பிறந்தது ஒரு இடம்,வளர்ந்தது ஒரு இடம். கர்ணனைப் பெற்ற குந்தி தொலைவிலிருந்து வாழ்த்தியதைப் போல "வாழ்க வளர்க"என்று கூறி தூரத்தில் இருப்பவன் நானல்ல. அவர் என்றுமே என் உள்ளத்தில் உள்ளார்.அவர் அரும்பாக இருக்கும் போதே,அது மலராகும் என அறிந்தவன் நான்.எல்லோரையும் விட அவரை வாழ்த்துவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஒன்பது பாவத்தை தொண்ணூறு வகையாக.... கவியரசு கண்ணதாசன், 

சிவாஜிப் பற்றி சில வரிகள் எதை எழுதுவது,எதை விடுவது? இமய மலையின் எந்த மூலையைப் புகழ்ந்தால் நியாயமாக இருக்கும்? கடலிலே எந்தப் பகுதி அழகான பகுதி? சிவாஜி ஒரு மலை;சிவாஜி ஒருகடல்;

கண்களின் கூர்மையைச் சொல்வேனா?

கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா?

ஒன்பது பாவத்தையும் தொண்ணூறு வகையாக காட்டும் உன்னத நடிப்பைச் சொல்வேனா? அவரைப் போல் இது வரை ஒருவர் பிறந்ததில்லை;இனி பிறப்பார் என்பதற்கும் உறுதியில்லை ! இந்த உண்மை

உலகறிந்ததே...!

"நடிகர்திலகம்"பட்டம் கொடுத்தது யார்....

பேசும் படம் வார இதழ்:

சிவாஜி கணேசன் "நடிகர் திலகம் "ஆனது எப்படி....?

"பேசும் படம்" மாத இதழில் வாசகர் ஒருவர் ஒரு கேள்வி எழுதி அனுப்பியிருந்தார் "சிவாஜி கணேசனுக்கு "நடிகர் திலகம் "என பட்டமளித்தால் மிகப்பொருத்தமாக இருக்குமே?எனக்கேட்டிருந்தார்.ஆசிரியர், "மிகப்பொருத்தமாக இருக்கும் என பதில் அளித்திருந்தார். இப்படித்தான் சிவாஜி கணேசன் "நடிகர் திலகம் "ஆனார்.ஆனால்  கடைசி வரை அந்த வாசகர் யார் என தமிழ் திரையுலகம் கண்டறிய முயற்சிக்கவில்லை. 

"நடிப்பின் சிகரம் சிவாஜி கணேசன் "

மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன்:

சிவாஜி கணேசன் நடித்த பல படங்களுக்கு இசை அமைந்தவன் நான்.நான் அவருடைய சொந்தப் படங்களுக்கும் நிறைய பணியாற்றியிருக்கின்றேன்.இசையமைப்பில் அவர் தலையிடவே மாட்டார் பொறுப்பை நம்பிக்கையுடன் என்னிடம் ஒப்படைத்து விடுவார்.சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரித்த "புதிய பறவை"படத்திற்கு ஒரு பாடல் பதிவு செய்ய 21 நாட்கள் கடந்தது. நானும்,கண்ணதாசனும் ரொம்ப கஷ்டப்பட்டோம். சிவாஜியே நேரில் வந்து என்ன விடயம் எனக்கேட்க,,நிலைமையை சொன்னோம் "உடனே பாடலுக்கான சூழலை நடித்தே காண்பித்து "நாயகன் "எங்கே நிம்மதி",எங்கே நிம்மதி என  நிம்மதியின்றி அலைகின்றான் என விபரித்து விளக்க அவர் கூறிய முதல் அடியை கொண்டே "எங்கே நிம்மதி "என்ற ஜனரஞ்சக பாடலை "பதிய பறவையில் கொண்டு வந்தோம்.

ஒரு முறை டி.எம்.சௌந்தரராஜனை மாறுபட்ட பாணியில் பாடவைக்க வேண்டும் என்பதற்காக "சாந்தி"படத்தில் "யார் அந்த நிலவு" என்ற தேரோட்டம் போன்ற ஒரு நீரோட்டமான பாடலை அமைத்தோம்.இப்பாடலை பல தடவைகள் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார் சிவாஜி. பாடலை எழுதியவர்,பாடியவர்,இசையமைத்தவர் மூவரும் வித்தியாசமாக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.அவர்களைவிட என் நடிப்பும் சிறப்பாக வித்தியாசமாக அமைய வேண்டும் என்பதற்காக சிறிது கால அவகாசம் எடுத்துக் கொண்டேன் என்றார். இப்பாடல் காட்சியில் சிவாஜியுடன் சிகரட்டும் நடித்தது.என்னவொரு தொழில் பக்தி. சிவாஜி என்றுமே நடிப்பில் சிகரம் தான்.

யுகக்கலைஞன் சிவாஜி கணேசன் ...

கவிப்பேரரசு வைரமுத்து....

உங்கள் "பராசக்தி "வெளிவந்து ஓராண்டுக்குப்பின் நான் பிறக்கிறேன்.

நீங்கள் விருட்சமாய் வளர வளர

நான் விதையாய் முளைத்திருக்கிறேன்.

உங்கள் படங்களைப் பார்க்க போனது மட்டுந்தான் கால் சட்டைப் பைகளில் நிரப்பிக் கொண்டு போன கடலைகளைத் தின்னாமல் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறேன்.

"மனோகரா"பார்த்து விட்டு அந்த உணர்ச்சியில் சிறிதும் சிந்தாமல் அப்படியே வீட்டுக்கு வந்து சங்கிலிக்குப் பதிலாக தாம்புக் கயிற்றால் என்னைப் பிணைத்து இருவரை இழுத்துப் பிடித்துக் கொள்ளச் செய்து விட்டு

புளிய மரத்தை புருஷோத்தமனாக்கி

என்னை வசனம் பேச வைத்ததவர் நீங்களல்லவா..?

"வீரபாண்டிய கட்டபொம்மன் "பார்த்து விட்டு சோளத்தட்டையில் வாள் செய்து என்னைச் சுழற்ற வைத்தவர் நீங்களல்லவா...?

உலக சினிமா வரலாற்றில் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்கிருக்கிறது.

இந்திய சினிமா வரலாற்றில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் திலகத்திற்கு அதி முக்கிய பங்கிருக்கிறது.

நீங்கள் நடித்ததால் பல தமிழ் படங்கள் உலகத் தரம் பெற்றன...!

"நடிப்பின் இலக்கணம் சிவாஜி கணேசன்"

புரட்சி கவிஞர் பாரதிதாசன்:

அலரி நறுமுல்லை ஆம்பல் குருக்கத்தி அல்லி

எனும் மலரி லுயர்ந்த மலர் தாமரை எனல் போலுலகில் சிலரில் ஒருவர் சிறந்த நடிகர் சிவாஜி எனப் பலரில் ஒருவன் பகர்ந்தேன் தமிழ்த்தாய் மகிழ்ந்தனளே!

எகுபதி யர்க்கு விருந்தாய் நடிப்பின் இலக்கணத்தை மிகுபதி யாரும் வியக்க வியக்க விளக்கியவர் தகுபதி யான சிவாஜி கணேசர் தமிழகத்தில் பகுபதி னாயிரம் ஆண்டுக் கொருத்தர் பகர்த்திடிலே!

படிப்பென்று சென்றால் இலக்கம் பத்தாயிரம் பார்த்தளிப்பார் துடிப்பென்று சென்றால் தூய்பசி நீக்கி உவப்புறுவார் நடிப்பென்று சென்றால் அதற்குமே நற்புகழ் நம்ம தென்பார் மடி பொன்றிலாது சிவாஜி கணேசனார் வாழியவே!

விண்ணகத்து ஆதவன் ஒளியுள்ளவரை

தென்னகத்து கலை வேந்தன் சிவாஜி கணேசன் புகழொளி என்றென்றும் சுடர் வீசும் பல யுகங்கள் கடந்து....!

சிவாஜி பிரியன்,எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22