7 வயது சிறுவன் ஒருவன் சிறிய தாயினால் சுடுநீர் முகத்தில் ஊற்றப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

 மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செரண்டிப் (அந்தோணிமலை) தோட்டத்தில் சிறிய தாயொருவர் தனது 7 வயதான  மகனின் முகத்திலும் கைகளிலும் சுடுநீரை ஊற்றியுள்ளார்.

இவ்வாறு பாதிப்புக்குள்ளான சிறுவன் எஸ்.சிவராஜ் (7 வயது )   எரிகாயங்களுக்குள்ளாகிய நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சிறுவனின் தாய் இறந்துவிட்ட பின்னர் சிறுவனின் தந்தை மறுமணம் முடித்துள்ளார்.

இவர்களின் இருவரிடையே வாழ்ந்து வருகின்ற குறித்த சிறுவனுக்கு தனது தந்தை இரண்டாவதாக திருமணம் முடித்த பெண்ணே இவ்வாறு சுடுநீரை ஊற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணை கைது செய்யும் நடவடிக்கைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.