சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,740 முறைப்பாடுகள்

Published By: Vishnu

26 Jul, 2021 | 07:55 AM
image

கடந்த ஆறு மாதங்களுக்குள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்கள் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 4,740 முறைப்பாடுகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சிறுவர்களை வீட்டுப் பணியாளர்களாகப் பயன்படுத்துகின்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எச்சரித்துள்ளது.

சிறுவர்களுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்ட பல தொழில்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்த்தப்படும் என்றும் இது அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சட்டமாக மாற்றியமைக்கப்படும் என்றும் அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் 16 வயதுடைய சிறுமி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்த சம்பவம் வருத்தத்த‍ை தருவதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38