நாட்டில் டெல்டா பரவலால் நான்காவது அலை ஏற்படுமாயின் பாரிய அழிவை எதிர்கொள்ள நேரிடும்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Published By: J.G.Stephan

25 Jul, 2021 | 05:06 PM
image

(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் பரவல் நான்காவது அலை ஏற்படுமாயின்,  அதற்கான பிரதான காரணி டெல்டா வைரஸாகவே காணப்படும். இந்தியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் டெல்டா பரவலானது பாரிய அழிவை ஏற்படுத்தியது. எனவே இலங்கையில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின் அது கட்டுப்படுத்த முடியாததாகிவிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

எனவே சமூகத்திலுள்ள டெல்டா தொற்றாளர்கள் சரியாக இனங்காணப்பட வேண்டும் என்பதோடு, நான்காவது அலை உருவாகுவதையும் தடுக்க வேண்டும். அதற்கு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதோடு சுகாதார விதிமுறைகளையும் மிகவும் இறுக்கமாக பின்பற்ற வேண்டும் என்றும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் நான்காவது கொவிட் அலை உருவாகக் கூடும் என்றும், மேலும் பல டெல்டா தொற்றாளர்கள்  சமூகத்தில் இருக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அது மாத்திரமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வாக அமையாது. சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதும் அத்தியாவசியமானதாகும். காரணம் எந்த வகைத் திரிபுகளாகக் காணப்பட்டாலும் அவை பரவும் வழிமுறை ஒரே மாதிரியானதாகவே காணப்படும்.

நாட்டில் 61 டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள அதேவேளை, அது பரவும் வேகமும் மிகவும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விட டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு பாதிப்புக்களானது 1000 மடங்கு அதிகமாகக் காணப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர்  தெரிவித்தார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56