யாழ். பல்கலைகழகத்தினுள் அமைந்துள்ள முஸ்லிம் மாணவர்களின் தொழுகை அறை மீது மூன்றாவது தடவையாகவும் இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைகழகத்தின்  மாணவர் பொது மண்டபத்தில் உள்ள அறை ஒன்று முஸ்லீம் மாணவர்கள் தொழுகை செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை (5) வழமை போன்று அவ்வறைக்கு தொழுகைக்காக சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் அறை கதவு மூடப்பட்ட நிலையில் பொருட்கள் உடைக்கப்பட்ட நாசமாக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.