முதியோர் துஸ்பிரயோகத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட வேண்டும்: அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார்

Published By: J.G.Stephan

25 Jul, 2021 | 01:14 PM
image

சிறுவர் துஸ்பிரயோகத்திற்கெதிராக குரல்கள் எழுப்பப்படுவதுபோல் முதியோர் துஸ்பியோகத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட வேண்டும் என யாழ் மறை மாவட்டக் குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.


சில்லாலை புனித யாகப்பர் ஆலய திருவிழா திருப்பலி இன்றுகாலை நடைபெற்றபோது திருவிழா திருப்பலியை தலமையேற்று ஒப்புக்கொடுக்கையிலே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர்  மேலும் தெரிவிக்கையில்,  தற்போது இணையத்தளங்களில், பத்திரிகைகளில் சிறுவர் துஸ்பிரயோகம், சிறுமி கொலை தொடர்பாக செய்திகள் வெளிவருகின்றது. குறித்த சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டு, தீயில் எரிந்துள்ளாள் என்றும்,  இதன் பின்னர் சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் கவனயீர்புக்கள் இடம்பெற்று சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

 இதேபோல் முதியோர்களும் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். இந்த விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும். வயோதிபர்களது மாண்புகள், முக்கியத்துவங்கள், அனுபவங்கள் மதிக்கப்படவேண்டும். திருத்தந்தை இந்த வருடம் ஜூலை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை  முதியோருக்காக செபிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இனி ஒவ்வொரு வருடமும்  ஜூலை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதியோர்தினம் அனுஸ்டிக்கப்படும். முதியோரும் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள் , அவர்கள் துணையில்லாது முதுமையாலும் துன்பப்படுகிறார்கள், தமது பிள்ளைகளால் துன்னப்படுத்தப்படுகிறார்கள், சொத்துக்களை பறிப்பதற்காக துன்பப்படுத்தப்படுகிறார்கள் இவ்வாறான பல முதியோர்கள் பாதுகாக்கப்படவேண்டும். அவர்கள் உரிமைகள் மதிக்கப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01