தோட்டத்தொழி­லாள­ர்­களின் சம்­பள பிரச்­சி­னைக்­கு விரைவில் தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­யம் 

17 Dec, 2015 | 08:58 AM
image

போரினால் முற்­று­மு­ழு­தாக அழி­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட வடக்கு, கிழக்­கிலே இந்­திய அர­சாங்­கத்­தினால் 40 ஆயிரம் வீடுகள் நிர்­மா­ணித்துக் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்ற போதிலும் எமது மக்­களின் வீடில்லாப் பிரச்­சி­னைக்கு இது­வ­ரை­யிலும் முழு­மை­யான தீர்வு காணப்­பட்­டி­ருக்­க­வில்லை. வடக்கு – கிழக்கில் இவ்­வாறு வீடு­களை நிர்­மா­ணிக்கும் வேலைத்­திட்­டத்­திலும் ஏனைய அபி­வி­ருத்திப் பணி­களின் போது ஒன்­றி­ணைந்த செயற்­றிட்­டத்தை முன்­னெ­டுப்­பதே சிறந்­தது என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா நேற்று சபையில் தெரி­வித்தார்.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள அதி­க­ரிப்பு தொடர்­பான பேச்­சு­வார்த்­தையில் இன்னும் முடிவு காணப்­ப­டா­தி­ருக்­கின்­றது. விரைவில் இப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வு­கா­ணப்­பட வேண்டும் என்­ப­துடன் அவர்­க­ளுக்­கான வீட்டுப் பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­பட வேண்டும் என்று கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு –செலவுத் திட்­டத்தின் வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை அமைச்சின் மீதான குழு­நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

மாவை எம்.பி. இங்கு மேலும் கூறு­கையில்,

வீடில்லாப் பிரச்­சினை என்­பது பாரிய பிரச்­சி­னை­யாக இருக்­கி­றது. போரினால் பாதிக்­கப்­பட்ட வடக்கில் மாத்­திரம் இரண்டு இலட்­சத்து 16 ஆயிரம் வீடுகள் அழிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

இப்­ப­கு­தி­களை மையப்­ப­டுத்தி இந்­திய அர­சாங்­கத்­தினால் இனங்­கா­ணப்­பட்ட 50 ஆயிரம் வீடு­களில் 40 ஆயிரம் வீடுகள் நிர்­மா­ணித்துக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. இருப்­பினும் எமது மக்­களின் வீடில்­லாப்­பி­ரச்­சி­னைக்கு முழு­மை­யான தீர்வு கிடைத்­து­வி­ட­வில்லை.

இன்­றைய நிலை­யிலும் எமது மக்கள் முகாம்­களில் தங்­கி­யுள்­ளனர். உற­வி­னர்கள், நண்­பர்­க­ளது வீடு­களில் இருக்­கின்­றனர். தென்­னிந்­தி­யா­விலே 111 முகாம்­களில் 168000 பேர் அக­தி­க­ளாக இருந்து வரு­கின்­றனர். அவர்கள் தமது சொந்த இடங்­க­ளுக்குத் திரும்­ப­வேண்டும் என்றே விரும்­பு­கின்­றனர். எனினும் இரா­ணுவம் அவர்­க­ளது காணி­களை அக்­கி­ர­மிப்பு செய்­தி­ருக்­கின்­ற­மையால் எமது மக்கள் தமது காணி­க­ளுக்கு திரும்ப முடி­யா­துள்­ளது. இதே நிலை வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்­டங்­க­ளிலும் இருக்­கின்­றது.

எனவே மீள்­கு­டி­யேற்றம், காணி மீட்பு, வீட்டு நிர்­மாணம் ஆகிய விட­யங்­களில் இணைந்த குழு­வாக செயற்­ப­டுதல் இங்கு அவ­சி­ய­மா­கின்­றது. இதனை இரண்டு தினங்­க­ளுக்கு முன்பு கூட இந்த சபையில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தேன்.

இதே­போன்று தோட்ட தொழி­லா­ளர்­களின் பிரச்­சினை பற்­றியும் இங்கு பேச வேண்­டி­யுள்­ளது.

அவர்­க­ளது சம்­பளப் பேச்­சு­வார்த்தை இன்னும் முடி­வு­றாத நிலை காணப்­ப­டு­கின்­றது. இவ்­வி­ட­யத்தில் தீர்­வு­கா­ணப்­பட வேண்டும் என்று கேட்­டுக்­கொள்­கிறேன். அதேபோன்று அந்த மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கும் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முற்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக போரினால் பாதுகாக்கப்பட்ட எமது பிரதேசம் தொடர்பில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43