வத்தளை தனித் தமிழ் பாடசாலை அமைப்பு விவகாரம் தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. எனவே இந்த விடயத்தில் மேல் மாகாண சபை தலையீடு செய்து தமிழ் மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் என மேல்மாகாணசபை முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.

மேல்மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான சிராவஸ்தி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.