மாணவர்களின் எதிர்காலத்தைப் பலிகொடுக்க இயலாது - பந்துல 

Published By: Digital Desk 4

23 Jul, 2021 | 04:54 PM
image

( இராஜதுரை ஹஷான்)

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதன் மூலம் இந்நாட்டின் எதிர்கால சந்ததியினரை முன்நிறுத்திய சேவையை உயர்மட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கும் அதனூடாக இலங்கையின் இலவசக் கல்வி முறைமையை மேலும் வலுப்படுத்துவதற்கும் முடியும். 

ஒரு வாரத்திற்குள் நாடு பாரிய நெருக்கடிக்குள் விழும் ஆபத்து - பந்துல குணவர்தன  | Virakesari.lk

எனவே இதுவிடயத்தில் அரசியல் அபிலாஷைகள் மற்றும் போராட்டங்களால் மாணவர்களின் எதிர்காலத்தைப் பலிகொடுப்பதற்கு இடமளிக்காமல் ஜனாதிபதியுடனும் கல்வியமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்தி , இப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது  மிகவும் வரவேற்கத்தக்கதாகும் என  வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வர்த்தகத்துறை அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்ததுரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அண்மைக்காலத்தில் உலகநாடுகள் அனைத்தும் பாரிய பொருளாதார நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் எமது நாட்டில் அரசாங்கத்தினால் பின்பற்றப்பட்டுவரும் சுமுகமான பொருளாதாரக்கொள்கையைத் தொடர்ந்து பேணுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

2020 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த வருமானமான 1216 பில்லியன் ரூபாவில் 86 சதவீதமானவை அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் வேதனக்கொடுப்பனவுகளுக்காக செலவிடப்பட்டுள்ளன.

 அவ்வாறிருக்கையில் ஏனைய செலவினங்களை ஈடுசெய்வதற்கேற்ற போதிய வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள்மீது அதிக வரிச்சுமையை சுமத்துவது அல்லது செலவினங்களைக் குறைப்பது அல்லது நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வது போன்ற மாற்றுவழிகளைக் கையாளவேண்டிய நிர்பந்தம் எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஏற்படுவது இயல்பானதாகும்.

எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் போன்ற எந்தவொரு உலகளாவிய நெருக்கடிகளும் ஏற்பட்டிருக்காத நிலையிலும்கூட பெருமளவான கடன்களைப் பெற்றமை ,எவ்வித ஆராய்வுமின்றி நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்தமை மற்றும் நாட்டுமக்கள்மீது அதிக வரிச்சுமையை சுமத்தியமை போன்ற காரணங்களால் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.

அவ்வாறானதொரு நிலையில் நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,அதற்கு மத்தியிலேற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியிலும் இயலுமானவரை பொருளாதாரத்தை செயற்திறன்மிக்க வகையில் நிர்வகிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதுடன் பொதுமக்களுக்கு அவசியமான வரிக்குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

இதுகுறித்து கடந்த காலத்தில் நான் வெளியிட்ட கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டு தவறாகப் பொருள்படக்கூடியவாறு சில ஊடகங்களால் வெளியிடப்பட்டன.

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலப்பகுதியில் கல்வியமைச்சர் என்ற வகையில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆதரவாக செயற்பட்ட அதேவேளை ,எப்போதும் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு நாம் இடமளிக்கவில்லை.

 அதுமாத்திரமன்றி ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சினையைப் பொறுத்தவரை  ஏனைய அரசசேவைகளில் தாக்கம் ஏற்படாதவகையில் அதற்குத் தீர்வுகாண்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த வேளையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் காரணமாக அச்செயற்பாடுகள் முழுவதுமாகத் தடைப்பட்டன.

ஆசிரியர்களின் சம்பளம் நூற்றுக்கு நூறு சதவீதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன்.

அதன்மூலம் இந்நாட்டின் எதிர்கால சந்ததியினரை முன்நிறுத்திய சேவையை உயர்மட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கும் அதனூடாக இலங்கையின் இலவசக்கல்வி முறைமையை மேலும் வலுப்படுத்துவதற்கும் முடியும்.

எனவே இதுவிடயத்தில் அரசியல் அபிலாஷைகள் மற்றும் போராட்டங்களால் மாணவர்களின் எதிர்காலத்தைப் பலிகொடுப்பதற்கு இடமளிக்காமல் ஜனாதிபதியுடனும் கல்வியமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்திஇ இப்பிரச்சினைக்கான தீர்வைக்கண்டடைவது மிகவும் வரவேற்கத்தக்கதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08