தனிமைப்படுத்தல் விதிமுறைகள் குறித்து தீவிர கண்காணிப்பு கடமையில் 10,000 பொலிஸார்

Published By: Digital Desk 3

23 Jul, 2021 | 11:48 AM
image

(எம்.மனோசித்ரா)

வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்படுகின்றமை தொடர்பில் விசேட கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதோடு , இதற்காக சுமார் 10,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

அத்தோடு மேல் மாகாணத்திற்குள் முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்கள் தொடர்பில் 3 விசேட பொலிஸ் குழுக்கள் ஊடாக சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 152 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 51,733 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 45,000 சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தாக்க செய்யப்பட்டுள்ளது. மேலும் 6,000 பேருக்கு எதிராக எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வழக்கு தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் வாகனங்கள் பிரவேசிக்கின்ற 13 இடங்களில் 4,204 வாகனங்களில் பயணித்த 6,662 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதன் போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அல்லது மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 95 வாகனங்களில் பயணித்த 168 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்படுகின்றமை தொடர்பில் விசேட கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதோடு , இதற்காக சுமார் 10,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மேல் மாகாணத்திற்குள் பெருமளவானோர் முகக்கவசம் அணியாமல் நடமாடுகின்றமை புலனாய்வுப்பிரிவினரால் இனங்காணப்பட்டுள்ளது. 

எனவே மூன்று விசேட குழுக்கள் மூலம் இவ்வாறான நபர்களைக் கைது செய்வதற்கு விசேட சுற்றிவளைப்புக்கள் மேல் மாகாணத்திற்குள் முன்னெடுக்கப்படவுள்ளன. எனவே தொடர்ந்தும் முகக்கவசம் அணிவதோடு , தனிமைப்படுத்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு சகலரையும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30