இறுதி நிமிடத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட மே.இ.தீவுகள் - ஆஸி.க்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி

Published By: Vishnu

23 Jul, 2021 | 09:34 AM
image

கொவிட்-19 கவலைகள் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி பார்படோஸில் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இடைநிறுத்தப்பட்டது.

மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியானது மே.இ.தீவுகள் அணியுடன் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரண்டாவது போட்டி ஜூலை 22 (இலங்கை நேரப்படி இன்று) நடைபெறவிருந்தது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

அதைத் தொடர்ந்து மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக தகவல் வெளியான நிலையில், ஒரு பந்து கூட வீசப்படாது, போட்டி ஆரம்பமாவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் மைதானத்தில் இருந்த இரு அணி வீரர்களும் மற்றும் ஊழியர்களும் பாதுகாப்பு குமிழியின் கீழ் ஹோட்டல் அறைகளுக்கு திரும்பிச் சென்றனர்.

இந் நிலையில் அனைத்து உறுப்பினர்கள், வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் இன்று மீண்டும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். 

சோதனை முடிவுகள் தெரிந்தவுடன் போட்டி எப்போது மறுதொடக்கம் செய்யப்படும் என்பது குறித்த முடிவு எடுக்கப்படும். அது வரை அனைவரும் அவர்களது அறைகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று என்று மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41