அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் - பாலித ரங்கே பண்டார 

Published By: Digital Desk 4

23 Jul, 2021 | 06:32 AM
image

(நா.தனுஜா)

நாம் ஏற்கனவே கூறியதைப்போன்று ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கு எதிராகவுமன்றி, அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக மாத்திரம் நம்பிக்கையில்லாப்பிரேரணையைக் கொண்டுவந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளடங்கலாக அக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் நம்பிக்கையில்லாப்பிரேரணை மீதான விவாதத்தின்போது செயற்பட்ட விதத்திலிருந்து அவர்கள் எந்தளவு அறிவுடனும் அக்கறையுடனும் இப்பிரேரணையைக் கொண்டுவந்திருக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி கருவுக்கு உண்டு - பாலித ரங்கே பண்டார  | Virakesari.lk

இதுகுறித்து புதன்கிழமை ( 22)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 

எமது கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக, அதாவது நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்குத் தீர்மானித்தார்.

நம்பிக்கையில்லாப்பிரேரணையைக் கொண்டுவந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ அதனை முன்வைத்த தினத்தன்று பாராளுமன்றத்திற்கு வருகைதரவில்லை.

அதேபோன்று நம்பிக்கையில்லாப்பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தினத்தில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்காருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்காததன் காரணமாக அதுவும் வலுவானதாக அமையவில்லை.

மேலும் எதிர்க்கட்சித்தலைவர் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப்பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடுவதைவிடுத்து, கல்வித்துறை தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

இவற்றிலிருந்து எத்தகைய நோக்கத்துடனும் எந்தளவு அக்கறையுடனும் அவர்கள் இந்த நம்பிக்கையில்லாப்பிரேரணையைக் கொண்டுவந்திருக்கின்றார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47