பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பொடிமெனிக்கே ரயில் தடம் புரண்டுள்ளதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

ரயிலின் பயணிகள் பெட்டி ஒன்றே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

கொட்டகலை - ஹட்டன் ஆகிய புகையிரத நிலையத்திற்கிடையில் 110 என்ற கட்டைப்பகுதியில் இன்று 1.45 மணியளவில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பயணிகளை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

ரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும், அதன்பின்னர் மலையக ரயில் சேவை வழமைக்கு திருப்பும் எனவும் ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

(க.கிஷாந்தன்)