ஜனாதிபதியின் தந்தை வந்தாலும் கூட மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பலையை அடக்கி விட இயலாது: ஹிருணிகா

Published By: J.G.Stephan

22 Jul, 2021 | 05:42 PM
image

(நா.தனுஜா)
தனிப்பட்ட அரசியல் நலன்களை மையப்படுத்திய அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள். இவ்வாறானதொரு சூழ்நிலையில் மீண்டும் அடுத்த 5 வருட பதவிக்காலத்திற்காகப் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். 

ஆனால் அடுத்துவரும் தேர்தல்களில் அவரோ, பசில் ராஜபக்ஷவோ மாத்திரமல்ல, அவரது தந்தை டி.ஏ.ராஜபக்ஷவே வந்தாலும்கூட, தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புணர்வை இல்லாமல் செய்யமுடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி, துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் விளைவாக நீதிமன்றத்தீர்ப்பு முற்றிலும் கேள்விக்குட்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், நாட்டின் சட்டம், பொலிஸ், நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்தும் ஜனாதிபதியின் கட்டளையை விடவும் மேலானவை அல்ல என்றால், அவை அவசியமில்லை அல்லவா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியதிலிருந்து நாட்டிலுள்ள பெண்களும் சிறுவர்களும் தொடர்ச்சியாகப் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் அதனை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. அவற்றுக்குத் தீர்வைப்பெற்றுத்தருமாறு வலியுறுத்தி அண்மைக்காலத்தில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கித் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றார்கள். இவற்றுக்கு மத்தியில், அடுத்த பொலிஸ்மா அதிபராகும் கனவுடன் இருவர் தமது திறமைகளைப் போட்டிபோட்டுக்கொண்டு ஜனாதிபதியிடம் வெளிக்காட்டி வருகின்றார்கள். அவர்கள் அப்பாவிப் பெண்களிடமும் வயது முதிர்ந்தவர்களிடமும் தமது வீரத்தைக் காண்பிக்கின்றார்கள். அவர்கள் இருவருக்கிடையிலான போட்டியினால் அப்பாவிப் பொதுமக்களே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55