உணவுப்பொருட்களில் நியம அளவைவிட சீனி, உப்பு மற்றும் கொழுப்புகளின் அளவு சேர்க்கப்பட்டிருந்தால் வரி அறவிடப்போவதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிரந்தியத்தின் 69 கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிரந்தியத்தின் 69 கூட்டத் தொடரின் தலைவராக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.