ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்விற்கு சீனா நன்றி..!

Published By: J.G.Stephan

21 Jul, 2021 | 07:45 PM
image

(நா.தனுஜா)
கொவிட் - 19 வைரஸ் பரவலுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடியவாறான சைனோபாம் தடுப்பூசியின் செயற்திறன் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுகள் தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் அவசியமானதும் பொருத்தமானதுமாகும் என சீனா பாராட்டுத் தெரிவித்திருக்கின்றது.

சீனாவினால் உற்பத்திசெய்யப்படும் சைனோபாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களில் 95 சதவீதமானோருக்கு டெல்டா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்புப்பெறக்கூடியவாறான நோயெதிர்ப்புசக்தி விருத்தியடைவது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் கண்றியப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை மேற்கோள்காட்டி, இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

திரிபடைந்த டெல்டா வைரஸிற்கு எதிரான நோயெதிர்ப்புசக்தியை உருவாக்கக்கூடிய வகையிலான சைனோபாம் தடுப்பூசியின் செயற்திறன் தொடர்பில் உலகிலேயே முதலாவதாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியாகியிருப்பதுடன் அவை மிகவும் வரவேற்கத்தக்கவையாக உள்ளன. தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் அவசியமானதும் பொருத்தமானதுமான இந்த ஆய்வை முன்னெடுத்த பேராசிரியர் நீலிகா மலவிகே மற்றும் வைத்தியநிபுணர் சந்திம ஜீவந்தர ஆகியோருக்கு எமது நன்றியை வெளிப்படுத்த விரும்புகின்றோம்.  

மேற்படி ஆய்வுகளின் பிரகாரம், சைனோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களின் 95 சதவீதமானோருக்கு நோயெதிர்ப்புசக்தி உருவாவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயெதிர்ப்புசக்தியானது கொவிட் - 19 வைரஸின் திரிபுகளான டெல்டா மற்றும் பீற்றா ஆகியவற்றுக்கு எதிரான செயற்திறனைக் கொண்டிருக்கின்றன என்று அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14