கடன் பெறாமல் அரசு நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது: மாற்று வழி இருந்தால் கூறலாம்..!

Published By: J.G.Stephan

21 Jul, 2021 | 07:40 PM
image

(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பூகோளிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்  அரசமுறை கடன் பெறாமல் அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது. என்பதை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. கடன் பெறாமல் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும் ஏதேனும் திட்டம் எதிர் தரப்பினர் வசம் இருக்குமாயின் தாராளமாக முன்வைக்கலாம்.

 பொருளாதார நெருக்கடியினை நாட்டு மக்கள் மீது சுமத்த முடியாது. தற்போதைய நிலையில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க முடியாது. எதிர்வரும் வாரங்களில் அரிசியின் விற்பனை விலையை 20 ரூபாவினால் குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. என வர்த்தகத்துறை அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை எதிர்க் கொண்டுள்ளது என்பதை மறைக்க வேண்டிய தேவை கிடையாது. தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கையின் காரணமாக இந்நிலைமை ஏற்படவில்லை என்பதை அரசியல்வாதிகளை தவிர்த்து சிறந்த நாட்டு மக்கள் அறிந்துக் கொள்வார்கள்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள். வருடத்திற்கு கிடைக்கப் பெறும் அரச வருவாயில் 86 சதவீதம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும், அரச சேவையாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதற்கும் செலவு செய்யப்படுகிறது. மிகுதி வருவாய் ஏனைய நிர்வாகத்திற்காக ஒதுக்கப்படுகிறது என்றார்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43