பேலியகொடை பகுதியில் சீனியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  

24 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சீனி கண்டைனர்களில்  கொண்டுவரப்பட்டபோது, அதில் ஒரு கண்டைனரை, குறித்த சந்தேகநபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். 

இதன்பின்னர், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில் இரத்மலானை விஷேட பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து குறித்த சீனித் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதேவேளை, திஸ்ஸமஹராம மற்றும் கல்கிஸை ஆகிய பகுதிகளில் இருந்து குறுpத்த சந்தேக நபர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களிடம் சுமார் 23 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.