கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைத் தாக்கும் புதிய நோய் - சுகாதார தரப்பு எச்சரிக்கை

Published By: Digital Desk 4

21 Jul, 2021 | 10:14 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான பின்னர் மிஸ்-சி எனப்படும் நோய் சிறுவர்களை தாக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள சுகாதார தரப்பு , இந்நோயிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க பெற்றோர் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

நாளொன்றுக்கு 2500 இற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகலாம் - சுகாதார  தரப்பு எச்சரிக்கை | Virakesari.lk

இது குறித்து கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் பூஜித விக்கிரமசிங்க தெரிவிக்கையில் ,

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு மிஸ்-சி என்ற நோய் தாக்கம் ஏற்படுவது அதிகரித்துள்ளது. எனினும் சமூகத்தில் தற்போது கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்கள் எந்தளவிற்கு உள்ளனர் என்பதை ஸ்திரமாகக் கூற முடியாது.

காரணம் பெரும்பாலான சிறுவர்கள் எவ்வித அறிகுறியும் இன்றியே தொற்றுக்கு உள்ளானவர்களாகக் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் மிஸ்-சி என்ற நோய் தாக்கம் ஏற்பட்டு கால தாமதமாகி சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதால் உயிரிழக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது.

எனவே எவ்வித நோய் அறிகுறிகள் தென்பட்டாலும் தாமதிக்காமல் சிறுவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கு பெற்றோர் தயங்கக் கூடாது.

சிறுவர் வைத்தியசாலையில் இதுவரையில் கொவிட் தொற்றால் 10 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த 10 பேரும் ஏனைய நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர்.

இவர்களில் நால்வர் கடந்த மாதத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே பெற்றோர் குழந்தைகள் தொடர்பில் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00